Home » Reviews » ஆம்பள – விமர்சனம்
ஆம்பள – விமர்சனம்

ஆம்பள – விமர்சனம்

தயாரிப்பாளரான பிறகு வேகம் இன்னும் அதிகரித்திருக்கிறது விஷாலுக்கு. முன்பை விட வேகமாக நடிப்பதாகட்டும், சொன்ன தேதியில் படத்தை வெளியிடுவதாகட்டும் விஷாலுக்கு நிகர் விஷால் தான். தீபாவளிக்கு பூஜை, பொங்கலுக்கு ஆம்பள. இரண்டுமே கமெர்சியல் மசாலாக்கள் தான். பொங்கலுக்கு ஏற்ற ஒரு ட்ரீட்டாக அமையுமா இந்த ஆம்பள?

படத்தின் கதைப்படி, விஷாலின் தந்தை பிரபு. பிரபுவுக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததால் வீட்டை விட்டு கோபித்துக்கொண்டு மூத்த மகனான, சின்ன பிள்ளை விஷாலுடன் கிளம்புகிறார் விஷாலின் அம்மா. பல வருடங்களுக்கு பிறகு தன் இன்னொரு மகனை பார்க்க வேண்டும் என ஆசைப்படுகிறார். விஷால் அப்பாவை தேடிப்போகிறார். அங்கு அப்பாவுடன் சேர்த்து தன் இரண்டு சகோதரர்களையும் பார்க்கிறார் விஷால். பிரபுவுக்கு மூன்று தங்கைகள். அவர்கள் பிரபுவிடம் சண்டை போட்டு பிரிந்து இருக்கிறார்கள்.

பிரபு மூன்று அத்தைகளுக்கும், மூன்று பெண்கள், அவர்களைத்தான் நீங்க மூணு பேரும் கல்யாணம் பண்ணிக்கனும் என சொல்கிறார். அந்த மூன்று பேரும், மூன்று அத்தை மகள்களை திருமணம் செய்தார்களா? பிரிந்த குடும்பம் சேர்ந்ததா? என்பதே மீதிக்கதை.

விஷால், ஒவ்வொரு படத்துக்கும் எடுத்துகொள்ளும் இடைவெளி மிகவும் குரைவாக இருந்தாலும், நிறைவாக நடித்து விடுகிறார். காதல், காமெடி, சண்டைக்காட்சிகள் என எல்லாவற்றிலும் சூப்பர்.

படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. பிரபு, வைபவ், சதிஷ், சந்தானம், ஹன்சிகா, மாதவி லதா, மதுரிமா, ரம்யா கிருஷ்ணன், ஐஷ்வர்யா, கிரண், விஜயகுமார், பிரதீப் ராவத், மனோபாலா என அனைவருமே நிறைவாக நடித்துள்ளனர். ஆண்ட்ரியா ஒரு காட்சியில் கெஸ்ட் ரோலில் வந்து போகிறார். சந்தானம் செய்யும் அலப்பறையிலும், பேசும் டபுள் மீனிங்கிலும் தியேட்டரே குலுங்குகிறது.

கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகளில் இதம், சண்டைக்காட்சிகளில் அனல். ஹிப் ஹாப் தமிழா முதன்முறையாக இசையமைத்துள்ளார். பழகிக்கலாம், அய் அய் பாடல்கள் முணுமுணுக்க வைக்கின்றன. பின்னணி இசை அதிர்கிறது.

சுந்தர்.சி அவருடைய பாணியில் ஒரு காமெடி கலந்த பொழுதுபோக்கு படத்தை குறைந்த நேரத்தில் முடித்து பொங்கல் விருந்து படைத்துள்ளார். மொத்தத்தில் ‘ஆம்பள’ இந்த பொங்கலில் களைகட்டும் ஒரு கமெர்சியல் “கொண்டாட்டம்”.

About admin

Sathish Kumar is Well Known in the Tamil industry as Common Man, as his reviews with Pseudo name as ‘Common Man’ gets published officially in 7 websites & only Corporate Paper. His reviews are viewed by almost 10 Lakhs people every week. He owns the Common Man Media Company, which acts as Single Point of Contact for Producers (www.commonmanmedia.co.in)

Leave a Reply