Home » Reviews » அண்ணாதுரை – விமர்சனம்
அண்ணாதுரை – விமர்சனம்

அண்ணாதுரை – விமர்சனம்

நான், சலீம், பிச்சைக்காரன் படங்களில் சின்ன கல்லு, பெரிய லாபமாக அனைவரையும் திருப்திப்படுத்திய விஜய் ஆண்டனி, கடைசி இரண்டு படங்களும் சுமாராகவே ஓடியது. இந்நிலையில் அவர் நடித்து வெளியாகியுள்ள படம் அண்ணாதுரை. பிச்சைக்காரன் படத்தை போலவே இருக்கும் என அனைவர் மத்தியிலும் எதிர்பார்ப்பு கூடியுள்ள படமே அண்ணாதுரை. ரசிகர்கள், பாக்ஸ் ஆபீஸ் என அனைவரையும் திருப்திபடுத்துமா? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, அண்ணாதுரையும் தம்பிதுரையும் இரட்டையர்கள். அண்ணாதுரை தனது காதலியின் மறைவால் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி அவள் நினைவிலேயே வாடுகிறார். யாராவது உதவி என வந்தால் எந்த எல்லைக்கும் போய் உதவி செய்பவர். அவரை திருமணம் செய்து கொள்ள இரண்டு பெண்கள் விரும்ப, அவர்களை குடியை காரணம் காட்டி மறுக்கிறார். இதற்கிடையில் வாத்தியாராக இருக்கும் தம்பிதுரைக்கு டயானா சாம்பிகாவை திருமணம் செய்து வைக்க இருவீட்டாரும் முடிவு செய்கிறார்கள். ஒரு கட்டத்தில் அண்ணாதுரை, ஜுவல் மேரியை திருமணம் செய்து கொள்ளவும் சம்மதிக்கிறார். இதற்கிடையில் எதிர்பாராத ஒரு சம்பவத்தில் 7 வருடம் சிறைக்கு செல்கிறார். அண்ணாதுரை ஜெயிலில் இருந்த 7 ஆண்டுகளில் என்ன நடந்தது? அதன் விளைவுகள் என்ன? என்பதே மீதிக்கதை.

அண்ணன், தம்பி என இரண்டு வேடங்களில் விஜய் ஆண்டனி நடித்திருக்கிறார். தனது எதார்த்த நடிப்பால் ரசிக்க வைக்கிறார். அண்ணாதுரை கதாபாத்திரத்தில் ரசிகர்களை கலங்கவும் வைக்கிறார். தம்பிதுரையாக மிரட்டுகிறார். கதை தேர்வில் இன்னும் கூட அடுத்தடுத்த படங்களில் கவன்ம் செலுத்த வேண்டும். எடிட்டர் ஆகியிருக்கும் விஜய் ஆண்டனியின் படத்தொகுப்பும் சிறப்பாகவே உள்ளது.

டயானா சாம்பிகா தமிழ் பெண், ரசிக்க வைக்கிறார். சிறப்பாகவும் நடித்திருக்கிறார். ஜுவல் மேரி, மஹிமா இருவரும் கொஞ்சம் வந்து போனாலும் உணர்வுகளை பிரதிபலித்து இருக்கிறார்கள். காளி வெங்கட், நளினிகாந்த், சேரன் ராஜ், ராதாரவி, மொட்டை ராஜாகுமார், ரிந்து ரவி, பத்திரிக்கையாளர் செந்தில் குமரன் ஆகியோரும் தங்கள் பங்கை சிறப்பாக அளித்திருக்கிறார்கள். குறிப்பாக செந்தில், செண்டிமெண்ட் காட்சிகளில் ரசிகர்களை கலங்க வைக்கிறார்.

விஜய் ஆண்டனியின் இசையில் வச்சி செய்யுற, தங்க்கமா வைரமா பாடல்கள் ரசிக்கும்படி இருக்கிறது. பின்னணி இசையும் படத்திற்கு பலம். தில்ராஜின் ஒளிப்பதிவில் திருக்கோவிலூர் பகுதிகளை அழகாக காட்டியிருக்கிறார்.

உறவுகளின் மேன்மையை சொல்லும் ஒரு எமோஷனல் கமெர்சியல் படத்தை கொடுக்க முயற்சி செய்து ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார் அறிமுக இயக்குனர் சீனிவாசன். அண்ணன், தம்பி கதையை வேறு கோணத்தில் சொல்லியிருக்கும் இயக்குநர் சீனிவாசனுக்கு பாராட்டுக்கள். வசனங்கள் நன்றாக இருக்கிறது. முதல் பாதிக்கு பிரகு வரும் காட்சிகள் திடீர் திடீரென அடுத்த கட்டங்களுக்கு செல்வது திரைக்கதையை பலவீனமாக்குகிறது.

About admin

Sathish Kumar is Well Known in the Tamil industry as Common Man, as his reviews with Pseudo name as ‘Common Man’ gets published officially in 7 websites & only Corporate Paper. His reviews are viewed by almost 10 Lakhs people every week. He owns the Common Man Media Company, which acts as Single Point of Contact for Producers (www.commonmanmedia.co.in)

Leave a Reply