Home » Reviews » அறம் – விமர்சனம்
அறம் – விமர்சனம்

அறம் – விமர்சனம்

மாயா, டோரா படங்களுக்கு பெரும் வெற்றிகளுக்கு பிறகு நயன்தாரா படத்தின் முதன்மை நாயகியாக நடித்திருக்கும் படம் தான் அறம். கத்தி படத்தின் கதை பிரச்சினையில் போராடிய கோபி நயினார் இயக்கியிருக்கும் முதல் படம். தண்ணீர் பிரச்சினையை நுட்பமாக அலசி ஆராய்ந்திருக்கும் படம். வெற்றி பெற்றதா? இயக்குனர் கோபி தன்னை நிரூபித்தாரா? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, வட தமிழ்நாட்டில் ஸ்ரீஹரிகோட்டா அருகில் இருக்கும் கிராமத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம். குடிக்க கூட தண்ணர் இல்லாமல் உப்பு தண்ணீரை பயன்படுத்தி வருகிறார்கள். அந்த ஊரில் தண்ணீருக்காக ஊர் கவுன்சிலர் ஒருவர் போட்ட ஆழ்துளை குழாயில் ஒரு சிறுமி விழுந்து விடுகிறாள். அவளை காப்பாற்ற அரசாங்க அதிகாரிகள் செய்யும் முயற்சிகளையும், அதற்கு தலைமை தாங்கும் மாவட்ட ஆட்சியர் நயன்தாரா என்ன செய்தார்? குழந்தையை காப்பாற்ற என்ன அணுகுமுறையை மேற்கொண்டார்? குழந்தை காப்பாற்றப்பட்டதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

தமிழ் சினிமாவில் நாயகிகள் என்றாலே கவர்ச்சி கன்னி, டூயட் பாடுபவர்கள் என்பதை தாண்டி, நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகைகள் என யாருமே இல்லை. ஆனால் அப்படி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, நல்ல படங்களை கொடுத்து வருபவர் தான் நயன்தாரா. அதுவும் இந்த அறம் படத்தில் சமூகத்துக்கு தேவையான கருத்துகளை பளிச்சென்று சொல்லியிருக்கிறார். மாவட்ட ஆட்சியராக எந்த அலட்டலும் இல்லாமல் சிறப்பாக நடித்திருக்கிறார். ஆட்சியராக இருந்தாலும் குழந்தைக்காக துடிக்கும் ஒரு சாதாரண பெண்ணாக உணர்வுகளை பிரதிபலித்திருக்கிறார். இந்த படத்தில் நடித்ததற்காகவே நயன்தாராவுக்கு பெரிய சல்யூட்.

படத்தில் குழந்தையின் அப்பா, அம்மாவாக வரும் ராம்ஸ், சுனு லக்ஷ்மி நம்மை உலுக்குகிறார்கள். காக்கா முட்டை விக்னேஷ், ரமேஷ், பழனி பட்டாளம், கிட்டி, வேல ராமமூர்த்தி, ராமதாஸ் ஆகியோரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

ஓம் பிரகாஷின் ஔிப்பதிவு சதுக்க நில பூமியை சிறப்பாக படம் பிடித்திருக்கிறது. ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு பலம் கூட்டியிருக்கிறது. பாடல்களும் கேட்கும்படியாக இருக்கிறது.

 

சம்பவ இடத்திற்கே நம்மை கூட்டிச் செல்வதுடன் தாக்கதையும் ஏற்படுத்தும்படியாக இருக்கிறது.

அறம் படத்தின் மூலம் மக்களுக்கு சிறப்பான விழிப்புணர்வுவை ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குனர் கோபி நயினார். படத்தில் வரும் வசனங்கள் ஒவ்வொன்றும் சவுக்கடி. இப்படிப்பட்ட ஒரு சமூக விஷயத்தை இரண்டு மணி நேர திரைக்கதையில் அழகாக சொல்லியிருக்கிறார். இந்த மாதிரி ஒரு படத்திற்காக இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்த நயன்தாராவுக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

About admin

Sathish Kumar is Well Known in the Tamil industry as Common Man, as his reviews with Pseudo name as ‘Common Man’ gets published officially in 7 websites & only Corporate Paper. His reviews are viewed by almost 10 Lakhs people every week. He owns the Common Man Media Company, which acts as Single Point of Contact for Producers (www.commonmanmedia.co.in)

Leave a Reply