Home » Reviews » என் வழி தனி வழி – விமர்சனம்
என் வழி தனி வழி – விமர்சனம்

என் வழி தனி வழி – விமர்சனம்

எல்லாம் அவன் செயல் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்த ஆர்.கே. புலிவேஷம், படத்தை தொடர்ந்து மாஸ் அவதாரம் எடுத்துள்ள படம் தான் என் வழி தனி வழி. ஆர்.கே.வின் ஆஸ்தான இயக்குனர் ஷாஜி கைலாஷ் இயக்கியுள்ளார்.

படத்தின் கதைப்படி, மத்திய குற்றப்பிரிவில் அசிஸ்டெண்ட் கமிஷனர் ஆர்.கே., இவருடைய குழுவில் தலைவாசல் விஜய், இளவரசு, மீனாட்சி தீட்சித் ஆகியோரும் பணி புரிகிறார்கள். மேலிடத்தில் கொடுக்கும் ரவுடிகளை என்கவுண்டர் செய்யும் பணியை செவ்வனே செய்து வருகின்றனர்.

அதில், அரசியலில் இருக்கும் முன்னாள் ரவுடியும் ஆர்.கே.வால் என்கவுண்டர் செய்யப்பட, கணவர் இறந்ததால் ரோஜா எம்.பி. ஆகிறார். அவர் சாவுக்கு காரணமான ஆர்.கே.வை ரோஜா பழிவாங்க துடிக்கிறார்.

தனது மகன் ஆர்.கே.வுக்கு நேரம் சரியில்லாததால், சில பரிகாரங்கள் செய்ய வேண்டும் என அவரது அம்மா சீதா, ஆர்.கே.வை அழைத்துக் கொண்டு கோயிலுக்கு போகிறார். அங்கு சீதா கொல்லப்படுகிறார்.

தனது அம்மாவை கொன்றது யார் என்ற விசாரணையில் இறங்கும் ஆர்.கே.வுக்கு சில உண்மைகள் தெரிய வருகின்றன. அதற்கு காரணமானவர்களை ஒவ்வொருவராக எவிடென்ஸ் இல்லாமல் கொலை செய்கிறார் ஆர்.கே.

பின்னர் தன்னை சுற்றி பின்னப்பட்ட சதி வலையில் இருந்து தப்ப ஆர்.கே. தலைமறைவாகிறார். அவரே நேரடியாக வந்து தனி நீதிமன்றத்தில் சரணடைகிறார். அப்போது தங்களது வேலையில் இருக்கும் சிரமங்களை நீதிபதி முன் எடுத்து வைக்கிறார். மேலும் நாட்டின் வளர்ச்சிக்கு சில முக்கிய கோரிக்கைகளை முன்வைக்கிறார்.

ஆர்.கே.வின் இந்த கோரிக்கைகளை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதா? அவரை நிரபராதி என்று தீர்ப்பளித்ததா? என்பதே மீதிக்கதை.

ஆர்.கே. பொறுப்பான என்கவுண்டர் போலீஸாக வலம் வருகிறார். முதல் படம் எல்லாம் அவன் செயல் போலவே கண்டிப்பான, கம்பீரமான கதாபாத்திரத்திற்கு ஏற்றார்போல் உள்ளார். காதல் காட்சிகள் என்று சொல்லிக் கொள்ளும்படி ஒன்றும் இல்லை.

இதனால் பூனம் கவுருக்கும் பெரிதாக வேலை இல்லை. ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் வந்து கவர்ச்சியாக ஆடிவிட்டு போகிறார். இன்னொரு நாயகியாக வரும் மீனாக்ஷி தீக்ஷித் என்கவுண்டர் போலீஸ். பேண்ட் சட்டையில் மிடுக்காக இருக்கிறார்.

ராதாரவி, ஆஷிஷ் வித்யார்த்தி, ரோஜா சிங்கமுத்து, தம்பி ராமையா, தலைவாசல் விஜய், இளவரசு என ஏகப்பட்ட நட்சத்திரங்கள். ஆர்.கே.வை தவிர மற்ற கதாபத்திரங்களுக்கு ஸ்கோப் இல்லை.தம்பி ராமையா, சிங்கமுத்து இருவரின் காமெடி டிராக் சுத்தமாக எடுபடவில்லை. வசனங்கள் படத்தின் முக்கிய அம்சம். ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் பரவாயில்லை.

என்கவுண்டர் செய்யக்கூடிய அதிகாரிகளுக்கு வரக்கூடிய பிரச்சினைகள், அவர்கள் அதை எதிர்கொள்வதற்குண்டான வழிகளை பற்றி இயக்குனர் ஷாஜி கைலாஷ் மூலக்கதையாக கூறியுள்ளார். மேலும் இராணுவத்தை நாட்டின் வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தையும் வலியுறுத்தி உள்ளார். படத்தின் உருவாக்கம் தான் கொஞ்சம் பழசாக இருக்கிறது.

About admin

Sathish Kumar is Well Known in the Tamil industry as Common Man, as his reviews with Pseudo name as ‘Common Man’ gets published officially in 7 websites & only Corporate Paper. His reviews are viewed by almost 10 Lakhs people every week. He owns the Common Man Media Company, which acts as Single Point of Contact for Producers (www.commonmanmedia.co.in)

Leave a Reply