Home » Reviews » ஹர ஹர மகாதேவகி – விமர்சனம்
ஹர ஹர மகாதேவகி – விமர்சனம்

ஹர ஹர மகாதேவகி – விமர்சனம்

2015ஆம் ஆண்டு வெளியாகி இளைஞர்களின் அமோக ஆதரவால் வெற்றி பெற்ற படம் தான் ‘திரிஷா இல்லனா நயன்தாரா’. அந்த படம் வெற்றி பெற்றாலும் ‘அடல்ட் ஒன்லி’ எனப்படும் அந்த மாதிரி படங்கள் பெரிதாக எதுவும் வரவில்லை. இதற்கிடையில் வாட்ஸாப்பில் பரவிய ‘ஹரஹர மகாதேவகி’ என்ற ஆடியோவை கேட்ட இயக்குனர், அதை தலைப்பாக வைத்து எடுத்துள்ள படம் தான் ‘ஹர ஹர மகாதேவகி’. இளைஞர்களை கவர்ந்ததா? வெற்றி பெற்றதா? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பெண்களை குறிவைத்து இலவசமாக மேக்கப் பொருட்கள் அடங்கிய பை ஒன்றை கொடுக்கிறார்கள். முதலமைச்சர் ஆசையில் இருக்கும் ரவிமரியா, ஓட்டு வாங்க அந்த பையில் வெடிகுண்டு ஒன்றை வைத்து அதை வெடிக்க வைக்கும் பொறுப்பை கருணாகரன் மற்றும் மொட்டை ராஜேந்திரனிடம் கொடுக்கிறார். எல்லோரிடமும் சென்று சேர்ந்த அந்த பை, பல இடங்களில் பலரால் உபயோகப்படுத்தப்படுகிறது. இதனால் பை மாறாட்டம் நடந்து, குழப்பம் விளைகிறது. இறுதியில் அந்த பாம் எங்கு வெடித்தது? என்பதே மீதிக்கதை.

கௌதம் கார்த்திக்குக்கு ‘இவன் தந்திரன்’ வெற்றிக்கு பிறகு வெளியாகியுள்ள படம். காதல், ரொமான்ஸ், நட்பு, காமெடி என கவுதம் கார்த்திக் நன்றாகவே நடித்திருக்கிறார். நிக்கி கல்ராணி கிளாமர், இரட்டை அர்த்த வசனங்கள் என தயங்காமல் போல்டாக நடித்திருக்கிறார்.

கவுதம் கார்த்திக்கின் நண்பனாக வரும் சதீஷ். பாம் வைக்க செல்லும் கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், அரசியல்வாதி ரவிமரியா, திருடனாக வரும் பாலசரவணன் ஆகியோர் காமெடியில் ரசிக்க வைக்கிறார்கள். மனோபாலா, நமோ நாராயணா, ஆர்.கே.சுரேஷ், மயில்சாமி, காயத்ரி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

பாலமுரளி பாலுவின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. குறிப்பாக ஹரஹர மகாதேவகி பாடல். பின்னணி இசையும் பலம் சேர்க்கிறது. எஸ்.கே.செல்வகுமாரின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.

வழக்கமாக பார்த்து சலித்த பெட்டி/பை மாறாட்ட கதையை ஆங்காங்கே தூசி தட்டி, இன்றைய காலத்திற்கு ஏற்ப திரைக்கதை அமைத்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் சன்தோஷ். காதல், ப்ரேக் அப், நட்பு, காமெடி, அரசியல் நையாண்டி, இரட்டை அர்த்த வசனங்கள் என இளைஞர்கள் விரும்பும் கதைக்களத்தில் படத்தை இயக்கியிருக்கிறார்.

About admin

Sathish Kumar is Well Known in the Tamil industry as Common Man, as his reviews with Pseudo name as ‘Common Man’ gets published officially in 7 websites & only Corporate Paper. His reviews are viewed by almost 10 Lakhs people every week. He owns the Common Man Media Company, which acts as Single Point of Contact for Producers (www.commonmanmedia.co.in)

Leave a Reply