Home » Reviews » ஐ – விமர்சனம்
ஐ – விமர்சனம்

ஐ – விமர்சனம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படத்துக்கு பிறகு பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கும் நேரடி படம் “ஐ”. கிட்டதட்ட மூன்று வருட உழைப்பை கொட்டி ஷங்கர் உருவாக்கியிருக்கும் படம். முந்தைய படங்களை போலவே மிகப்பெரிய வெற்றியை பெறுமா? உச்சகட்ட எதிர்பார்ப்பில் இருக்கும் ரசிகர்களை திருப்திப்படுத்துமா? இந்த “ஐ”. பார்ப்போம்!

படத்தின் கதைப்படி, மிஸ்டர் இந்தியா ஆக முயற்சித்து வரும் லிங்கேசன் கேரக்டரில் விக்ரம். மாடல் தியாவின் (எமி ஜாக்சன்) தீவிர ரசிகர். முயற்சியின் முதல் படியாக மிஸ்டர் மெட்ராஸ் ஆகிறார். இந்த சமயத்தில் நடக்கும் ஒரு எதிர்பாராத அதிர்ஷ்டத்தால் கனவு நாயகி தியாவுடன் விளம்பரத்தில் “லீ” என்ற பெயரில் நடிக்கிறார். மிகப்பெரிய விளம்பர மாடலாக வலம் வருகிறார். விக்ரமும், எமியும் திருமணம் செய்து கொள்ள நிச்சயதார்த்தம் நடக்கிறது.

இந்நிலையில் விக்ரம் காணாமல் போகிறார். எமி ஜாக்சனுக்கும், டாக்டர் சுரேஷ் கோபிக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்படுகிறது. விக்ரம் என்ன ஆனார்? கூனன் விக்ரம் யார்? விக்ரம் எமி ஜாக்சன் ஜோடி சேர்ந்தார்களா? என்பதே மீதிக்க்தை. இதனை நான்-லீனியர் எனப்படும் முறையில் சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.

விக்ரம், படத்தை தாங்கிப்பிடிக்கும் முக்கிய தூண்களில் முதல் தூண். பாடி பில்டராகவும், கூனனாகவும், மாடலாகவும் மாறி மாறி நடித்து அசத்துகிறார். அதுவும் அந்த கூனன் கேரக்டருக்கு அவர் உழைத்திருக்கும் உழைப்பு அபாரம். எந்த ஒரு நடிகரும் இந்த அளவுக்கு டெடிகேஷனோடு நடித்திருப்பார்களா? என்பதற்கு நிச்சயமாக இல்லை என்பது தான் பதில். கூனன் கேரக்டரில் சில இடங்களில் கண்ணீர் விட வைக்கிறார், பல இடங்களில் மிரட்டுகிறார். விருது கொடுத்து பாராட்டலாம்.

எமி ஜாக்சன், விளம்பர மாடலாக நடித்துள்ளார். மற்ற படங்களை விட அழகாகவும், கிளாமராகவும் இருக்கிறார். வடசென்னை மொழியில் அவர் பேசி நடிக்கும் காட்சியில் அப்ளாஸ் அள்ளுகிறார்.

சந்தானம் காமெடி கலக்கல். சில காமெடி காட்சிகளை குறைத்திருக்கலாம் என்று தோன்ற வைக்கிறது. ஷங்கர் படத்துக்கு பவர் ஸ்டார் தேவைப்படுகிறாரா? என்பதற்கு பதிலை ஷங்கர் தான் சொல்ல வேண்டும்.

பிரபுவின் அண்ணன் ராம்குமார் முதலில் மிரட்டுகிறார், போகப்போக கேரக்டர் நீர்த்துப் போகிறது. சுரேஷ்கோபியின் கேரக்டர் எதிர்பாராத திருப்பம், யூகிக்க முடிகிறது. உபென் படேல், ஒஜஸ் ரஜனி ஆகியோரின் கேரக்டர்களிலும் கவனம் செலுத்தியிருக்கலாம். அழுத்தம் கொடுத்திருக்கலாம்.

ஒளிப்பதிவு பி.சி.ஸ்ரீராம், காட்சிகளையும், பாடல்களையும் செதுக்கியிருக்கிறார். பூக்களே பாடலை படமாக்கிய விதமும், லொகேஷனும் அருமை. சண்டைக்காட்சிகள் அருமை.

ஏ.ஆர். ரகுமானின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். பின்னணி இசையும், கேரகடருக்கு ஏற்ற இசையும் ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்துள்ள விதம் அருமை.

ஷங்கரின் முந்தைய படங்களை தானாகவே ஒப்பிட்டு பார்க்கும் வழக்கம் இருந்து வருகிறது. அவ்வாறு ஒப்பிடுபவர்கள் இதில் நிறைய குறையாக உணர்வது மைனஸ். சுபாவுடன் சேர்ந்து ஷங்கர் வசனங்கள் எழுதியிருந்தாலும் அது பற்றாக்குறையாகவே இருக்கிறது. ஷங்கர், சுஜாதா கூட்டணியை இந்த கூட்டணியால் தொட முடியவில்லை என்பது குறை. இது போதுமா? என்று கேட்கும் அவர்களிடம், ரசிகர்கள் இல்ல, “அதுக்கும் மேல” வேணும் என்று கேட்கிறார்கள்.

About admin

Sathish Kumar is Well Known in the Tamil industry as Common Man, as his reviews with Pseudo name as ‘Common Man’ gets published officially in 7 websites & only Corporate Paper. His reviews are viewed by almost 10 Lakhs people every week. He owns the Common Man Media Company, which acts as Single Point of Contact for Producers (www.commonmanmedia.co.in)

Leave a Reply