Home » Reviews » கப்பல் – விமர்சனம்
கப்பல் – விமர்சனம்

கப்பல் – விமர்சனம்

இயக்குனர் ஷங்கரின் இணை மற்றும் உதவி இயக்குனர்கள் வரிசையாக இயக்குனர்கள் ஆகிக் கொண்டே இருக்கிறார்கள். அந்த வரிசையில் லேட்டஸ்டாக இடம் பிடித்திருப்பவர் கார்த்திக்.ஜி.கிரிஷ். ஆனால் ஷங்கர் பட பாணியில் இருந்து விலகி முழுநீள நகைச்சுவை படத்தை தந்திருக்கிறார். இளம் இயக்குனர்களின் சாய்ஸான வைபவ் தான் நாயகன். இயக்குனர் ஷங்கரே விழுந்து விழுந்து சிரித்து தன் பேனரில் வெளியிட்டு இருக்கிறார். ஷங்கரை திருப்திப்படுத்திய கப்பல் ரசிகர்களை திருப்தி படுத்தியதா?

படத்தின் கதைப்படி, வைபவ், கருணாகரன், அர்ஜுனன், வெங்கட் நண்பர்கள். வைபவ்-ன் நண்பர்கள். திருமணம் செய்து கொண்டால் நட்பு பிரிந்து விடும் என்பதால் பெண்களை கூட பார்க்காமல் வளர்கிறார்கள். ஆனால் வைபவ்-விற்கு காதல், ரொமான்ஸ் என எல்லாவற்றிலும் ஆசை. நண்பர்களோடு ஊரில் இருந்தால் காதலிக்க விடமாட்டார்கள் என்பதால் பொய் சொல்லிவிட்டு, நண்பர்களை விட்டு சென்னைக்கு ஓடி வந்து விடுகிறார். அங்கு நாயகியை சந்திக்கிறார், காதலில் விழுகிறார். இருவரும் காதலிக்கிறார்கள். நண்பர்கள் சென்னைக்கு வருகிறார்கள். இவர்களின் காதல் அவர்களுக்கு தெரிந்ததா? அவர்கள் பிரிந்தார்களா? சேர்ந்தார்களா? என்பதே மீதிக்கதை.

வைபவுக்கென்றே பண்ணப்பட்ட கதாபாத்திரம் போல செதுக்கியிருக்கிறார் இயக்குனர் கார்த்திக். படம் முழுக்க வைபவின் ரியாக்ஷன் மற்றும் பாடி லாங்குவேஜ் கச்சிதமாக பொருந்துகிறது. வைபவின் நண்பர்களாக வரும் கருணாகரன், அர்ஜுனன், வெங்கட் ஆகியோரது காமெடியில் தியேட்டர் குலுங்குகிறது. முதல் பாதியில் வயிற்றை பதம் பார்க்கிறார் விடிவி கணேஷ். வைபவின் காதலுக்கு அவர் தரும் ஐடியாக்களும், வைபவ் காதலுக்காக அவர் செய்யும் தியாகங்களும் அக்மார்க் சரவெடி கலாட்டா.

இரண்டாம் பாதியில் வைபவ், சோனம் பஜ்வா காதலை பிரிக்க திட்டம் போடும் காட்சிகளில் சிறு தொய்வு ஏற்பட்டாலும், ரசிக்க வைக்கின்றன. இறுதியில் கிளைமாக்ஸ் காட்சியில் நான்ஸ்டாப் சரவெடி காமெடி.

நாயகி சோனம் பஜ்வா மாடர்ன் கேரக்டரில் நச். நல்ல அழகு. நடிப்பதற்கு வாய்ப்பு அதிகம். நன்றாகவே நடித்துள்ளார்.

நடராஜன் சங்கரன் இசையில் காதல் கசாட்டா, ஒரு கப் ஆசிட் பாடல்கள் சூப்பர். பின்ன்ணி இசையும் ஒகே. காதல் கசாட்டா பாடல் படம் பிடிக்கப்பட்ட விதமும், செட்டும் அழகு. தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில் படம் ரிச்.

இயக்குனர் கார்த்திக் க்ரிஷ் முதல் படத்திலேயே திறமையை காட்டி ஷங்கரின் உதவியாளர் என்பதை நிரூபிக்கிறார்.

About admin

Sathish Kumar is Well Known in the Tamil industry as Common Man, as his reviews with Pseudo name as ‘Common Man’ gets published officially in 7 websites & only Corporate Paper. His reviews are viewed by almost 10 Lakhs people every week. He owns the Common Man Media Company, which acts as Single Point of Contact for Producers (www.commonmanmedia.co.in)

Leave a Reply