Home » Reviews » கருப்பன் – விமர்சனம்
கருப்பன் – விமர்சனம்

கருப்பன் – விமர்சனம்

வருடத்திற்கு அரை டஜன் படங்கள் கொடுக்கும் விஜய் சேதுபதியின் நான்காவது ரிலீஸ். கடந்த ஆண்டு தர்மதுரை போல, இந்த ஆண்டு கிராமத்து பின்னணியில் நடித்திருக்கும் படம் ‘கருப்பன்’. வெற்றியை கொடுப்பானா கருப்பன்? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, வேலைக்குப் போகாமல் வெட்டியாக சுற்றும் விஜய் சேதுபதி, பக்கத்து ஊரின் பெரும் புள்ளியான பசுபதியின் காளையை அடக்கி விடுகிறார். காளையை அடக்கினால் தன் தங்கையை மணம் முடித்துக் கொடுப்பதாக’ வாக்கு தரும் பசுபதியும் தான்யாவை விஜய் சேதுபதிக்கு மணம் முடிக்கிறார். தான்யாவின் முறைப்பையனான பாபி சிம்ஹாவுக்கு, தான்யா மேல் ஆசை. அவர்களை பிரித்து தான்யாவை அடைய நினைக்கிறார். சகுனி வேலை செய்து அவரை அடைந்தாரா? அதன் பிறகு என்ன ஆனது? என்பது மீதிக்கதை.

விஜய் சேதுபதி மாடுபிடி வீரனாக முறுக்கு மீசையோடு ரசிக்க வைக்கிறார். தான்யாவுடனான காதல் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. குடித்து விட்டு பண்ணுகிற அலப்பறைகளை பல படங்களில் பார்த்து விட்டதால் அது மட்டும் கொஞ்சம் போரடிக்கிறது. ஆக்ஷன் காட்சிகளிலும் மிரட்டுகிறார்.

சிட்டி பெண்ணாக பார்த்த தான்யா, இந்த படத்தில் கிராமத்தில் வாழும் படித்த பெண்ணாக அழகாக இருக்கிறார். பல காட்சிகளில் விஜய் சேதுபதியை தாண்டி கவனத்தை தன் மீது திருப்புகிறார்.

தன்யாவின் அண்ணனாக பசுபதி, வில்லனாக பாபி சிம்ஹா ஆகியோரது கதாபாத்திரங்கள் பெரிதாக எடுபடவில்லை. சிங்கம் புலி, ரேணுகா, சரத் லோகிதஸ்வா, லிங்கா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

டி.இமானின் இசையில் பாடல்கள் பெரிதாக மனதில் ஒட்டவில்லை. பின்னணி இசை பரவாயில்லை. சக்திவேல் ஒளிப்பதிவில் கிராமத்தை அழகாக காட்டியிருக்கிறார்.

ரேணிகுண்டா படத்தில் உணர்வுகளை சரியாக பிரதிபலித்த இயக்குனர் பன்னீர் செல்வம், இந்த படத்தில் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். அடிக்கடி வரும் பாடல்களும் இடைஞ்சல். பழைய கதைக்களம், பழகிப்போன காட்சிகள் படத்தின் பெரிய மைனஸ்.

About admin

Sathish Kumar is Well Known in the Tamil industry as Common Man, as his reviews with Pseudo name as ‘Common Man’ gets published officially in 7 websites & only Corporate Paper. His reviews are viewed by almost 10 Lakhs people every week. He owns the Common Man Media Company, which acts as Single Point of Contact for Producers (www.commonmanmedia.co.in)

Leave a Reply