Home » Reviews » கட்டப்பாவ காணோம் – விமர்சனம்
கட்டப்பாவ காணோம் – விமர்சனம்

கட்டப்பாவ காணோம் – விமர்சனம்

ராம நாராயணன் இயக்கிய பல படங்களில் பல வகையான மிருகங்களை நாம் இதுவரை பார்த்திருக்கிறோம். அப்படிப்பட்ட நமக்கே கொஞ்சம் புதிது மீன். ஒரு வாஸ்து மீனை சுற்றியே கதையும், கதாபாத்திரங்களும் நகர்வது கொஞ்சம் புதுசு தான். அதில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார் சிபிராஜ். சிபிராஜுக்கு வெற்றியை கொடுத்ததா? இந்த வாஸ்து மீன்? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, பிறந்ததிலிருந்தே ராசியில்லாத பையன் என்ற அடைமொழியோடு வளர்கிறார் சிபிராஜ். சிபியின் அப்பா சித்ரா லட்சுமணன் பல தொழில்களை செய்து நஷ்மடைந்து கடைசியில் ஜோசியராக மாறிவிடுகிறார். சிபியை எப்போதும் பேட் லக் பாண்டி என சொல்லி சொல்லியே வெறுப்பேற்றி வருகிறார்.

ஒருநாள் குடிக்க போன இடத்தில்  நாயகி ஐஸ்வர்யாவை கிளப்பில் பார்க்கிறார். இருவரும் பேசி, பழகி நெருக்கமாகிறார்கள், இருவரும் காதலர்களாகிறார்கள். ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு தனியாக வீடு பிடித்து குடியேறுகிறார்கள்.

வாஸ்து, ஜோதிடம் மீது நம்பிக்கை கொண்ட தாதாவான மைம் கோபி கட்டப்பா என்று வாஸ்து மீனை வளர்த்து வர, அந்த மீனை யோகி பாபு திருடி செல்ல, அது அவர்களின் கோமாளித் தனத்தால் பல கை மாறி ஹீரோ சிபிராஜ் வீட்டுக்குள் வந்து விடுகிறது. சல்லடை போட்டு மீனை தேடிய மைம் கோபியின் கைக்கு மீன் கிடைத்ததா? சிறு வயதில் இருந்தே ராசியில்லாத பையன் என்று வளர்ந்த சிபிராஜ் கையில் கிடைத்த வாஸ்து மீன் அவருக்கு ராசியை கொடுத்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

சிபிராஜ் படத்தில் யதார்த்தமாக, எந்த வெட்டி ஹீரோயிசமும் காட்டாத பாண்டி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். முழுக்க நகைச்சுவையுடன் கூடிய கதாபாத்திரம் என்றாலும் அதற்கேற்ற நடிப்பை மட்டும் கொடுத்து கைதட்டல் பெறுகிறார். சில இடங்களில் விஜயை நினைவுபடுத்துகிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் மாடர்ன் பெண்ணாக வலம் வருகிறார். குடிக்கிறார். இரட்டை அர்த்த வசனங்கள் பேசுகிறார். பாடலில் அழகாக வந்து போகிறார். சர்ப்ரைஸ் ஷீலா என்ற கெஸ்டு கதாபாத்திரத்தில் சாந்தினி கலகலப்பான பெண்ணாக வந்து ரசிக்க வைக்கிறார்.

காளி வெங்கட் காமெடி எடுபட்டிருக்கிறது. மைம் கோபி ஒரு சில காட்சிகள் வந்தாலும் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். யோகிபாபு ஒரு காட்சியில் வந்தாலும் கைதட்டல் பெறுகிறார். சித்ரா லட்சுமணன், லிவிங்க்ஸ்டன், ஜெயக்குமர், களவாணி திருமுருகன், டிடெக்டிவாக வரும் சரவணன் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார்கள்.

ஆனந்த் ஜீவாவின் ஒளிப்பதிவில் கல்ர்ஃபுல்லாக இருக்கிறது படம். பாடல் காட்சிகள் படமாக்கப்பட்ட விதமும் அருமை. சந்தோஷ் தயாநிதியின் இசையில் ‘ஹே பெண்ணே பாடல் மனதில் பதிகிறது. மற்ற பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசை ரசிக்க வைக்கிறது.

இயக்குனர் மணி சேயோன் முதல் படத்திலேயே வாஸ்து மீன் என்ற ஒன்றை மையமாக வைத்து அதை சுற்றி கதையை நகைச்சுவையோடு அமைத்திருக்கிறார். குழந்தைகளை மனதில் வைத்து எடுக்கப்பட்ட படம் என்று நினைத்து உள்ளே போனால் இது இளைஞர்களுக்கான படம் என்று சொல்லாமல் சொல்லி விட்டார் இயக்குனர். இரட்டை அர்த்த வசனங்கள் அதிகம் இருப்பதால் குடும்பத்தோடு பார்க்க முடியாத நிலை.

About admin

Sathish Kumar is Well Known in the Tamil industry as Common Man, as his reviews with Pseudo name as ‘Common Man’ gets published officially in 7 websites & only Corporate Paper. His reviews are viewed by almost 10 Lakhs people every week. He owns the Common Man Media Company, which acts as Single Point of Contact for Producers (www.commonmanmedia.co.in)

Leave a Reply