Home » Reviews » மணல் நகரம் – விமர்சனம்
மணல் நகரம் – விமர்சனம்

மணல் நகரம் – விமர்சனம்

இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வேலைக்காக துபாய், சிங்கப்பூர் மற்றும் பல வெளிநாடுகளுக்கு பயணமாகிறார்கள். அவர்கள் மிகவும் ஜாலியாக இருக்கிறார்கள், அவர்கள் போல நாமும் போக வேண்டும் என்பதும் பலரது கனவாக இருந்து வருகிறது. ஆனால் உண்மையில் நடப்பதே வேறு. அவர்கள் படும் துயரங்கள் வார்த்தையில் சொன்னால் உணரமுடியாது. அவர்களின் துன்பங்களை சொல்லும் படம் தான் ‘மணல் நகரம்’.

ஒரு தலை ராகம் படத்தின் மூலம் நமக்கு ஹீரோவாக பரிச்சயமான ஷங்கர் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். முழுக்க துபாயிலேயே படமாக்கப்பட்டுள்ளது இந்த படம்.

படத்தின் கதைப்படி, தமிழ்நாட்டில் இன்ஜினியரிங் படித்து விட்டு வேலையில்லாமல் அக்கா, மாமாவுடன் வாழ்ந்து வரும்கௌதம், அவருடைய நண்பர்பிரஜின் அழைப்பின் பேரில் துபாய்க்கு வேலை தேடி செல்கிறார்.கொஞ்ச நாட்களில் நல்ல வேலையும் கிடைக்கிறது. காதலும் கிடைக்கிறது. டூரிஸ்ட் விசாவில் செல்லும் கௌதம், பிரஜின் தங்கியிருக்கும் அறையிலேயே தங்குகிறார். ப்ரஜின் நண்பர்களும் இவருக்கு நண்பர்களாகிறார்கள்.

அங்கு ரெஸ்டாரன்டில் வேலை செய்யும் தேஜஸ்வினியை பிரஜின் காதலித்து வருகிறார். ஆனால் அவளை அந்த ஓட்டல் உரிமையாளர் அடைய முயற்சி செய்கிறார்.தேஜஸ்வினி சென்னையில் நிதி நிறுவனத்தில் வேலை செய்யும்போது, தனது கம்பெனியை நம்பி சிலரை அதில் முதலீடு செய்ய வைக்கிறார்.

ஆனால் அந்த கம்பெனியோ பணத்தோடுஎஸ்கேப் ஆகிவிட, தன்னை நம்பி முதலீடு செய்தவர்களின் கடனை அடைக்க துபாய்க்கு வந்து வேலை பார்த்து வருகிறாள். அங்கு தேஜஸ்வினியை பணம் கொடுத்த ஒருவர் பார்த்துவிட, தன் பணத்தை உடனே கொடுக்க சொல்லி பஞ்சாயத்து வைக்கிறார். அதனை பயன்படுத்திக்கொல்லும் ரெஸ்டாரண்ட் முதலாளி தங்களது ஆசைக்கு இணங்கினால் பணத்தை கொடுக்கவேண்டாம் என்று சொல்ல, பிரஜின் தன் நண்பர்களுடன் இணைந்து பணத்தை ஏற்பாடு செய்ய முயற்சி செய்கிறார்.

பணம் கிடைக்கும் நேரத்தில் ஒரு சிக்கல் ஏற்படுகிறது. பிரஜின் நண்பர்களும் வெவ்வேறு பிரச்சனையில் சிக்குகிறார்கள்.கௌதம்-வருணாவின் காதல் விஷயம் வருணாவின் அப்பாவிற்கு தெரிந்து, இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு வருகிறது. பிரச்சினைகளை தாண்டி பிரஜின் பணத்தை ஏற்பாடு செய்து தேஜஸ்வினி பிரச்சனையை தீர்த்தாரா? கௌதம்-வருணாவின் காதல் ஜெயித்ததா? என்பதை உணர்வுகளோடு கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.

பிரஜின் சேல்ஸ்மேனாக சிறந்த நடிப்பை வெளீப்படுத்தியுள்ளார். தன் காதல், கோபம், இயலாமை, அவமானம் என எல்லா உனர்வுகளையும் நன்றாக வெளிப்படுத்தியுள்ளார். கௌதம் கிருஷ்ணா கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.

தேஜஸ்வினி கஷ்டத்தை தாங்கிக் கொண்டு சிரித்து வாழும் கேரக்டரில் இயல்பாக நடித்துள்ளார். வலுவான கதாபாத்திரத்தில் தேஜஸ்வினி கலக்கும்போது, வருணா அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ரெஸ்டாரண்ட் முதலாளி, ஜேம்ஸ், ஜோதிட நண்பர் என அனைவரும் அளவாக நடித்திருக்கிறார்கள்.

ஸ்ரீதரின் ஒளிப்பதிவில் நாம் பார்க்காத துபாய் நம் கண்களுக்கு விருந்து என்பதில் சந்தேகமில்லை.

ரெனில் கௌதம் இசையில் பாடல் அனைத்தும் கேட்கும் ரகம், ஆனால் எல்லா படல்களுமே ஏற்கனவே கேட்ட ரகம்.

நல்ல ஒரு களத்தை எடுத்துக் கொண்டு இயல்பாக காட்சிகளை அமைத்து ரசிக்கும்படி கொடுத்திருப்பது பலம். வசனங்களும் கவனம் ஈர்க்கிறது. ஒருதலை ராகம் ஷங்கர இயக்குனராகவும் ஜெயித்திருக்கிறார்.

About admin

Sathish Kumar is Well Known in the Tamil industry as Common Man, as his reviews with Pseudo name as ‘Common Man’ gets published officially in 7 websites & only Corporate Paper. His reviews are viewed by almost 10 Lakhs people every week. He owns the Common Man Media Company, which acts as Single Point of Contact for Producers (www.commonmanmedia.co.in)

Leave a Reply