Home » Reviews » மேயாத மான் – விமர்சனம்
மேயாத மான் – விமர்சனம்

மேயாத மான் – விமர்சனம்

தீபாவளிக்கு பெரிய மாஸ் ஹீரோ படங்கள் ரிலீஸ் ஆகும் வேளையில் ஒரு சின்ன பட்ஜெட் காதல் கலந்த யதார்த்த படம் ரிலீஸ் ஆவது பெரிய விஷயம். அந்த வகையில் விஜய்யின் மெர்சல் ரிலீஸாகி இருக்கும் இந்த வேளையில் கார்த்திக் சுப்பாராஜ் தயாரிப்பில் வைபவ், ப்ரியா பவானிஷங்கர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் ‘மேயாத மான்’. மெர்சல் புயலில் இருந்து தப்பித்ததா? இந்த மான்? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, பெற்றோரை இழந்த வைபவ் தங்கை இந்துஜாவுடன் வாழ்ந்து வருகிறார். மேயாத மான் என்ற மெல்லிசைக் குழுவை நடத்தி வரும் அவர் காதலை சொல்லாமலேயே நாயகி பிரியாவை மூன்று வருடங்களாக ஒருதலையாக காதலித்து வருகிறார். இந்நிலையில் பிரியாவிற்கு, வேறொருவருடன் நிச்சயமாகிறது. வைபவ் தற்கொலை முயற்சி செய்ய, நண்பன் விவேக் பிரசன்னா பிரியாவிடம் சென்று வைபவின் காதலை எடுத்து சொல்லி, அவனை உயிரொடு மீட்டு கொடுக்க சொல்லி கேட்கிறார். அவரும் வைபவிடம் கோபமாக போனில் பேசி தன் கேரக்டரை தவறாக சித்தரித்து கொள்கிறார். தன்னை எப்படியெல்லாம் வைபவ் காதலித்தார் என்பதை பிரியா தெரிந்து கொள்கிறார். தன் திருமணத்தை ஒரு வருடம் தள்ளி வைக்கிறார். இந்த ஒரு வருடத்தில் என்னென்ன மாற்றங்க்கள் நடந்தது என்பதே மீதிக்கதை.

நாயகனாக வைபவ், மிகவும் யதார்த்தமாக லோக்கல் பையனாக, தங்கை மீது பாசம் உள்ள அண்ணனாக, சிறப்பாக நடித்திருக்கிறார். அவரின் பாடி லாங்குவேஜ், நடிப்பு எல்லாமே ரசிக்க வைக்கிறது.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்திருக்கும் பிரியா பவானி சங்கர் கொள்ளை அழகு. மிகவும் யதார்த்தமாக நடித்திருக்கிறார். இரண்டாம் பாதியில் ஸ்கோர் செய்கிறார்.

நட்புக்காக எதையும் செய்யும் விவேக் பிரசன்னா ரசிக்க வைக்கிறார். கிட்டத்தட்ட கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் அசால்ட்டாக ஸ்கோர் செய்கிறார். தமிழ் சினிமாவில் இன்னுமொரு குணச்சித்திர நடிகன் கிடைத்திருக்கிறார். வைபவின் தங்கையாக வரும் இந்துஜா சரியான தேர்வு. உணர்வுப்பூர்வமான காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். பிரியாவின் தோழியாக வரும் அபர்ணாவும் நன்றாக இருக்கிறார்.

சந்தோஷ் நாராயணன் மற்றும் பிரதிப் குமார் ஆகியோர் இசையில் வடசென்னையின் மனம் படம் முழுக்க வீசுகிறது. சிறப்பான பின்னணி இசையும் படத்துக்கு பக்கல் பலமாக அமைந்துள்ளது. விது ஐய்யனாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். சென்னையை சிறப்பாக காட்டியிருக்கிறது.

நல்ல வரவேற்பு பெற்ற ஒரு குறும்படத்தை முழுநீள திரைப்படமாக மாற்றுவது என்பது சாதாரண விஷயம் இல்லை. அதை அனாயாசமாக செய்து முடித்திருக்கிறார் இயக்குனர் ரத்னகுமார். படத்தின் கிளைமாக்ஸுக்கு முன்பு கொஞ்சம் படம் தொய்வை கொடுத்தாலும் முழு படமும் ரசிகர்களை ரசிக்க வைக்கிறது. இந்த மாதிரி ஒரு நல்ல படத்தை தயாரிக்க முன்வந்த கார்த்திக் சுப்பாராஜுக்கு வாழ்த்துக்கள்.

About admin

Sathish Kumar is Well Known in the Tamil industry as Common Man, as his reviews with Pseudo name as ‘Common Man’ gets published officially in 7 websites & only Corporate Paper. His reviews are viewed by almost 10 Lakhs people every week. He owns the Common Man Media Company, which acts as Single Point of Contact for Producers (www.commonmanmedia.co.in)

Leave a Reply