Home » Reviews » ராஜதந்திரம் -விமர்சனம்
ராஜதந்திரம் -விமர்சனம்

ராஜதந்திரம் -விமர்சனம்

தமிழில் அவ்வப்போது சில ‘கான்’(Con) படங்கள் வெளியாகும். அந்த வகையில் தமிழில் தற்போது வெளியாகியிருக்கும் படம் தான் ‘ராஜதந்திரம்’. ‘நடுநிசி நாய்கள்’ வீரா நாயகனாக நடித்துள்ளார். ரெஜினா நாயகியாக நடித்துள்ளார். புதுமுக இயக்குனர் அமித் இயக்கியுள்ளார்.

படத்தின் கதைப்படி, நாயகன் வீரா தன் நண்பர்களான அஜய் பிரசாத் மற்றும் சிவாவுடன் இணைந்து சிறு சிறு திருட்டு வேலைகளை செய்து பிழைப்பு நடத்துபவர். இவர்கள் ஒருநாள் நாயகி ரெஜினாவை சந்திக்கிறார்கள். எம்.எல்.எம்-மில் வேலை பார்த்து வரும் ரெஜினா வீராவையும் எம்.எல்.எம்.மில் சேர்த்து விடுகிறார். அவருடன் பழகும்போது தான் ரெஜினாவின் கஷ்டமான வாழ்க்கை வீராவுக்கு தெரிய வருகிறது.

அந்த கஷ்டத்துக்கு காரணமான கதாபாத்திரங்களை வீரா சந்திக்க நேரிடுகிறது. அங்கு நடைபெறவிருக்கின்ற ஒரு பெரிய மோசடியை நடத்திக் கொடுக்கும் பொறுப்பை வீரா ஏற்கிறார். ஒரு பெரிய பிளானை அரங்கேற்றி, அதில் தனக்கு பிரச்சினை கொடுக்கும் ஒரு கும்பலை அந்த சிக்கலில் மாட்ட வைத்து, ரெஜினா உட்பட நிறைய பேருக்கு உதவுகிறார் வீரா. இறுதியில் எப்படி அந்த மோசடியில் அனைவரையும் இணைத்தார்? அவரும், அவரது நண்பர்களும் தப்பித்தார்களா? என்பதே மீதிக்கதை.

நாயகனாக வீரா. ‘நடுநிசி நாயகள்’ படத்தை அடுத்து அவர் நடித்திருக்கும் படம். ரொம்பவும் அலட்டிக் கொள்ளாத கேரக்டர். முடிந்த வரை தனது சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். நாயகியாக ரெஜினா. அவர் செய்யும் மார்க்கெட்டிங் வேலையின் உண்மை நிலை பற்றி தெரியாமல், சின்சியராக அவர் வேலைபார்ப்பதை பார்க்கும்போது ஒருவித பரிதாபம். மற்றபடி, வழக்கமான கதாநாயகி போல், ஒருசில காட்சிகள் என வந்துவிட்டு போயிருக்கிறார்.

நாயகனின் நண்பர்களாக வரும் அஜய் பிரசாத், சிவா இருவரில் சிவா செய்யும் காமெடிகள், பேசும் வசனங்கள் ரசிக்கும்படி இருக்கிறது. அஜய் பிரசாத் கொஞ்சம் அழுத்தமான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

பட்டியல் சேகர் அமைதியான வில்லனாக வலம் வந்திருக்கிறார். அமைதியாகவே அனைத்து காரியங்களையும் செய்துவிடும் அலட்டல் இல்லாத வில்லனாக பளிச்சிடுகிறார். நரேன், இளவரசு ஆகியோரும் தங்கள் பங்களிப்பை செய்திருக்கிறார்கள்.

ஜி.வி.பிரகாஷ் இசையில் வரும் அந்த ஒரேயொரு பாடல் ரசிக்க வைக்கிறது. ஒளிப்பதிவு அருமை. இரவு நேரங்களை அசலாக காட்டியிருப்பது பிளஸ்.

இயக்குனர் அமித் அழகான திரைக்கதையாலும், காட்சியமைப்புகளாலும் ரசிகர்களை கவர்கிறார். நகைக்கடையை திருடுவதற்கும் போடும் திட்டம் விறுவிறு. படத்தில் திணிக்காதது மிகப்பெரிய ஆச்சர்யம். அதுவே பலம். இரண்டு மணி நேரமும் ரசிகர்களை சிந்திக்க வைத்த இயக்குனருக்கு சலாம்.

About admin

Sathish Kumar is Well Known in the Tamil industry as Common Man, as his reviews with Pseudo name as ‘Common Man’ gets published officially in 7 websites & only Corporate Paper. His reviews are viewed by almost 10 Lakhs people every week. He owns the Common Man Media Company, which acts as Single Point of Contact for Producers (www.commonmanmedia.co.in)

Leave a Reply