Home » Reviews » ஸ்பைடர் – விமர்சனம்
ஸ்பைடர் – விமர்சனம்

ஸ்பைடர் – விமர்சனம்

முருகதாஸ் படங்கள் என்றாலே விறுவிறுப்பான திரைக்கதை, ரசிக்கும் விதத்தில் கமெர்சியல், நல்ல மெசேஜ் என ஒரு கலவையாக இருக்கும். தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்த, இயக்கியிருக்கும் படம் தான் ‘ஸ்பைடர்’.

படத்தின் கதைப்படி, இண்டெலிஜென்ட் பீரூவில் பொதுமக்களின் போன் கால்களை ஒட்டு கேட்கும் வேலையைச் செய்யும் நாயகன் மகேஷ்பாபு, போனில் பேசும் அப்பாவி மக்கள் யாராவது பிரச்சனையில சிக்கியிருப்பது போல தெரிந்தால் அவர்களை காப்பாற்றி விடுகிறார். ஒரு நள்ளிரவில் பள்ளி மாணவிக்கு ஒரு பிரச்சனை வர, அவளை காப்பாற்ற முடியாமல் போகிறது. தன்னையும் மீறி அந்த கொலை நடந்ததால், அதன் காரணம் என்ன? யார் அதற்கு பின்னால் இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார் மகேஷ் பாபு. முயற்சியில் பல அதிர்ச்சியான விஷயங்கள் தெரியவர, மகேஷ் பாபு என்ன செய்தார்? பெரும் ஆபத்தில் இருந்து மக்களை காப்பாற்றினாரா? என்பதே மீதிக்கதை.

தெலுங்கில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் மகேஷ் பாபு, தமிழில் முதல் படம் என்று சொல்லவே முடியாத அளவுக்கு, தமிழ் உச்சரிப்பில் சிறப்பாக நடிக்கிறார். தமிழில் உணர்வுபூர்வமான காட்சிகளை பார்த்த ரசிகர்களுக்கு அவரின் நடிப்பு கொஞ்சம் சுமாராக தான் தெரியும். நாயகியாக ரகுல் ப்ரீத் சிங். ஒரு இரவுக்கு துனை தேடும் கதாபாத்திரம் பின் மகேஷ்பாபுவின் மீது காதலாகி, அவருக்கு உதவும் பெண்ணாகவும் அந்து போகிறார். பாடல் காட்சிகளில் ரசிகர்களை கவர்கிறார்.

எஸ்.ஜே.சூர்யா. மிரட்டலான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். சைக்கோ வில்லனாக மிரட்டுகிறார். இடைவேளை காட்சியில் அவரின் நடிப்பு செம்ம. ஆர்.ஜே.பாலாஜி, பரத், ஜெயபிரகாஷ் ஆகியோரும் சின்ன, சின்ன கதாபாத்திரங்களில் வந்து போகிறார்கள்.

சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சியும், கலர்ஃபுல். ஹாரீஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

சைக்கோ கொலையாளி, அவனை சுற்றிய துப்பறியும் கதையை மையமாக வைத்து ஸ்பைடர் படத்தை இயக்கி இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். முதல் பாதியில் சில காட்சிகள் சுவாரஸ்யமாக இருந்தாலும், இரண்டாம் பாதி பின்னடைவை ஏற்படுத்துகிறது. லாஜிக் மீறல்களும், திரைக்கதை பலவீனமும் படத்தின் பெரிய மைனஸ்.

About admin

Sathish Kumar is Well Known in the Tamil industry as Common Man, as his reviews with Pseudo name as ‘Common Man’ gets published officially in 7 websites & only Corporate Paper. His reviews are viewed by almost 10 Lakhs people every week. He owns the Common Man Media Company, which acts as Single Point of Contact for Producers (www.commonmanmedia.co.in)

Leave a Reply