Home » Reviews » வெள்ளக்காரதுரை – விமர்சனம்
வெள்ளக்காரதுரை – விமர்சனம்

வெள்ளக்காரதுரை – விமர்சனம்

கும்கியில் அறிமுகமானாலும் அதற்கு பின் வெளியான படங்களில் குடும்பங்களை திரையரங்குக்கு வரவழைக்க தவறி விட்டார் விக்ரம் பிரபு. அதனை நிவர்த்தி செய்ய விரும்பி எடுக்கபட்ட படம் தான் இந்த வெள்ளக்கார துரை. தேசிங்கு ராஜாவில் பெற்ற வெற்றியை இதிலும் பதிவு செய்யும் முனைப்பிலிருந்த இயக்குனர் எழில் செய்திருக்கும் முயற்சி. வினியோகத்தில் கொடி கட்டி பறக்கும் கோபுரம் ஃபிலிம்ஸ் அன்புச்செழியன் முதல் முதலாக தயாரித்திருக்கும் படம். இவர்களோடு சேர்த்து ரசிகர்களையும் திருப்திப்படுத்தியதா? இந்த படம்??

படத்தின் கதைப்படி, வட்டிக்கு விடும் வரதனிடம் கடன் வாங்கி ரியல் எஸ்டேட் பிசினஸ் ஆரம்பிக்கின்றனர் சூரியும், விக்ரம் பிரபுவும். சுடுகாட்டை ஏமாற்றி இவர்கள் தலையில் கட்டிவிட, அதே நேரத்தில் வட்டி வரதன் இவர்களை அடிமையாக அவர்கள் தோட்டத்தில் கடனுக்காக வேலை வாங்குகிறார். அங்கே நாயகி ஸ்ரீதிவ்யாவை பார்க்கும் விக்ரம் பிரபுவுக்கு ஸ்ரீதிவ்யாவின் மீது காதல், ஆனால் ஸ்ரீதிவ்யாவை வில்லன் நிச்சயதார்த்தம் செய்து கொள்கிறான். நாயகி திருமணத்துக்கு முன் எஸ்கேப் ஆகி விடுகிறார். அதில் விக்ரம் பிரபு எப்படி உடந்தையாகிறார், நாயகிக்கு காதல் மலர்ந்த்தா? கடனுக்கு அடிமையாக போன நாயகனும், அவரது நண்பர்களும் என்ன ஆனார்கள் என்பதே மீதிக்கதை.

விக்ரம் பிரபுவுக்கு கும்கிக்கு பிறகு குடும்பத்தோடு பார்க்கும் வகையில் வந்துள்ள படம். காமெடியில் முடிந்தவரை ஸ்கோர் செய்கிறார். சூரியுடன் இணைந்து முதல்முறையாக காமெடியிலும் முடிந்தவரை கலக்கியுள்ளார். காதல் காட்சிகளிலும் நன்றாகவே நடித்துள்ளார்.

நாயகி ஸ்ரீதிவ்யா. அழகு, வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை போலவே முழுப்படத்திலும் தாவணியில் அள்ளுகிறார். குடும்பங்களின் இதயத்தில் சிம்மாசனம் போட்டு அமர்கிறார்.

சூரி, வழக்கம் போலவே எழில் படங்களில் தன்னுடைய பங்கை கொஞ்சம் அதிகமாகவே எடுத்துக்கொண்டு செய்திருக்கிறார். நிறைய இடங்களில் தியேட்டரில் அப்ளாஸ் பறக்கிறது. அவரின் நண்பர்களாக வரும் சரவணன் மற்றும் மிப்புவும் குட்.

ஜான் விஜய் ஆரம்ப காட்சியே திகிலடிக்க வைக்கிறது. சிங்கமுத்து, சிங்கம் புலி, மனோபாலா, மதுமிதா, நான் கடவுள் றாஜெந்திரன் ஆகியோரும் ரசிக்க வைக்கிறார்கள்.

சூரஜ் நல்லுசாமியின் ஒளிப்பதிவில் இயற்கை ஆங்காங்கே எழில் கொஞ்சுகிறது. இமான் இசையில் கூதக்காத்து, அம்மாடி பாடல்கள் இனிமை. காக்கா முட்டை பாடல் துள்ளல்.

மொத்தத்தில் குடும்பத்தோடு ஒருமுறை எந்த சலனமும் இல்லாமல் பார்த்து விட்டு வரலாம். தயாரிப்பாளரின் கல்லாவை நிரப்பும் என்பதில் துளி சந்தேகமும் இல்லை.

About admin

Sathish Kumar is Well Known in the Tamil industry as Common Man, as his reviews with Pseudo name as ‘Common Man’ gets published officially in 7 websites & only Corporate Paper. His reviews are viewed by almost 10 Lakhs people every week. He owns the Common Man Media Company, which acts as Single Point of Contact for Producers (www.commonmanmedia.co.in)

Leave a Reply