Home » News » விமல் – அஞ்சலி 3-வது முறையாக இணையும் “மாப்ளே சிங்கம்”
விமல் – அஞ்சலி 3-வது முறையாக இணையும் “மாப்ளே சிங்கம்”

விமல் – அஞ்சலி 3-வது முறையாக இணையும் “மாப்ளே சிங்கம்”

விண்ணைத்தாண்டி வருவாயா, அழகர்சாமியின் குதிரை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், தேசிங்கு ராஜா, மான் கராத்தே ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, தற்போது பிரபுசாலமன் இயக்கத்தில் கயல் படத்தைத் தயாரித்து வரும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் பி லிட் பட நிறுவனம் சார்பில் பி. மதன் தயாரிக்கும் புதிய படம் – மாப்ளே சிங்கம்.

இப்படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அஞ்சலி நடிக்கிறார். விமல், அஞ்சலி இருவரும் ஜோடியாக நடிக்கும் மூன்றாவது படம் இது.

கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா வெற்றிப்படங்களைத் தொடர்ந்து எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் பி லிட் பட நிறுவனத்துடன் விமல் இணையும் மூன்றாவது படம் இது.

மாப்ளே சிங்கம் படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் அறிமுக இயக்குநர் ராஜசேகர். இவர் இயக்குநர் எழிலிடம் உதவியாளராகப் பணியாற்றியவர். மாப்ளே சிங்கம் படத்தில் நகைச்சுவை வேடத்தில் சூரி நடிக்கிறார். ராதாரவி, மனோபாலா, மயில்சாமி, ‘முனீஸ்காந்த்’ ராம்தாஸ், காளி வெங்கட், சிங்கமுத்து, சுவாமிநாதன், விஷ்ணு, மதுமிலா ஆகியோர் நடிக்கின்றனர்.

இவர்களுடன், ஏ.ஆர்.ரஹ்மானின் கே.எம். மியூஸிக் ஸ்கூலின் வைஸ் பிரின்ஸிபால் ஆடம் க்ரீக் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஒளிப்பதிவு தருண் பாலாஜி. படத்தொகுப்பு விவேக் ஹர்ஷன். இசை ரகுநந்தன். சென்னை, அனகாபுத்தூர் முருகன் கோவிலில் பூஜையுடன் மாப்ளே சிங்கம் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. தொடர்ந்து சென்னையில் பல பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

About admin

Sathish Kumar is Well Known in the Tamil industry as Common Man, as his reviews with Pseudo name as ‘Common Man’ gets published officially in 7 websites & only Corporate Paper. His reviews are viewed by almost 10 Lakhs people every week. He owns the Common Man Media Company, which acts as Single Point of Contact for Producers (www.commonmanmedia.co.in)

Leave a Reply